ADDED : டிச 31, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் நாம் தமிழர் கட்சியினர் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் ஓடக்கூடிய அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற வார்த்தை நீக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழகம் என பெயரில் ஓடி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்களில் அரசு என்பதற்கு முன்பாக தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர்.
நேற்று மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மானாமதுரை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா, இளைஞர் பாசறை மாநில நிர்வாகி மனோஜ்குமார் தலைமையில் அவ்வழியாக வந்த பஸ்களை நிறுத்தி தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

