ADDED : ஆக 12, 2026 03:52 PM
காரைக்குடி, ஆக. 13-
காரைக்குடி மாநகராட்சி முன்பு விசிலடித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று, ஏ.ஐ.டி.யு.சி., தூய்மை பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து தூய்மை பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். காரைக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், பணியாளர்கள் அனைவரும் விசிலடித்து போராட்டம் நடத்தினர். இதில், ஏ.ஐ.டி.யு.சி., மாநிலத் துணைச் செயலாளர் ராமச்சந்திரன், இ.கம்யூ., மாவட்டச் செயலாளர் சாத்தையா, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டச் செயலாளர் ராசா, கட்டிட சங்க மாநில நிர்வாகி சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
