/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 22, 2025 03:43 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் இசை வகுப்புகளில் சேர விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் சிவ கங்கையில் இயங்கும் அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதம், தவில், நாதஸ்வரம், தேவாரம், மிருதங்கம், வயலின் பயிற்சி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வயது 12 முதல் 25க்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதம், தேவாரம், வயலின் பயிற்சிக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தவில், நாதஸ்வரம் வகுப்பிற்கு கல்வி தகுதி தேவையில்லை. சேரும் மாணவர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மட்டுமே, இலவச பஸ் பாஸ் உண்டு. மாணவர்களுக்கு விடுதி வசதி, கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படும்.
இசைப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை சிவகங்கை பனங்காடி ரோட்டில் உள்ள அரசு இசைப்பள்ளியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

