ADDED : டிச 18, 2024 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா சருகணி அருகே விஜயபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சிங்கமுகம். 53., இவரது மகன் ஈஸ்வரன். 21., காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் எம்.பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சருகணி நண்பரிடம் டூவீலரை வாங்கி காரைக்குடிக்கு சென்று விட்டு இரவு 8:30 மணிக்கு வீடு திரும்பினார்.
விஜயபுரம் விலக்கில் திரும்பும் போது வேகமாக வந்ததால் டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மைல் கல்லில் மோதியதில் ஈஸ்வரன் பலியானார்.
இது தொடர்பாக தந்தை சிங்கமுகம் கொடுத்த புகாரில் திருவேகம்பத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.