நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்., மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்தல் நடைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தலைமைப்பண்புகளை ஊக்குவிக்கவும் பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது.
மாணவர் தலைவர், துணைத் தலைவர், ஒழுங்கு கட்டுப்பாட்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 320 மாணவர்கள் பங்கேற்றனர். 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், வாக்கெடுப்பில் பங்கேற்ற மாணவர்களையும் பள்ளி தாளாளர் செந்தில்குமார், செயலர் சந்திரசேகர் பாராட்டினர். பள்ளி முதல்வர் கவுரி சாலமன் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.