/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி
/
மரவள்ளி கிழங்கு சாப்பிட்ட மாணவி பலி
ADDED : மார் 10, 2024 02:18 AM

சிவகங்கை:சிவகங்கை அருகே தமறாக்கியில் மரவள்ளிகிழங்கு சாப்பிட்ட 7ம் வகுப்பு மாணவி சுவேதா 13, உயிரிழந்தார். இவரது சகோதரி சிகிச்சையில் உள்ளார்.
தமறாக்கியை சேர்ந்த கூலிதொழிலாளி வன்னிமுத்து. இவரது மகள்கள் சுவேதா , வனிதா 9. இருவரும் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டுள்ளனர். இருவருக்கும் கடும் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுவேதா உயிரிழந்தார். வனிதா சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர் கூறும்போது' சிறுமி இறந்து தான் மருத்துவமனைக்கு வந்தார்.
உணவு ஒவ்வாமை காரணமாக இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னரே முழுவிபரம் தெரியவரும் என்றார்.

