ADDED : பிப் 17, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி கல்லுாரி ரோட்டில் மாணவர் ஓட்டி சென்ற டூவீலரில் கார் மோதிய விபத்தில், மாணவர் சூடாமணிபுரம் சொக்கலிங்கம் மகன் சுதர்சன் 18, பலியானார்.
இம்மாணவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று சிறப்பு வகுப்பிற்காக புதிய டூவீலரை ஓட்டி சென்றார். சுப்பிரமணியபுரம் 10 வது வீதியில் கல்லுாரி ரோட்டை கடக்க முயன்றபோது கார் மோதியதில், மாணவர் சம்பவ இடத்தில் பலியானார். கார் டிரைவர் தீபக்கிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

