ADDED : ஏப் 29, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: பள்ளித்தம்மம் தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 1999 - 2001ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
தாளாளர் ஜெரால்ட் பிரிட்டோ தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஆண்டோ, ஆசிரியர்கள் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் குமார் முன்னிலை வகித்தனர். மீனாள் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
மேலாளர் நடராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் வீரபாண்டி, விஜய், ஆரோக்கியராஜ், திருச்சி மாத்துார் புனித வின்சென்ட் அகாடமி பள்ளி முதல்வர் சந்தோஷ், விஞ்ஞானி ஆனந்தராஜ் கலந்துகொண்டனர்.
