ADDED : மே 21, 2026 05:11 AM
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அரசு பொது தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனுார் அருகே உள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிட்டு மகள் ஷாலினியா 15, இவர் விருதுநகர் மாவட்டம் கட்டனுாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில் ஷாலினியா தமிழில் 45, ஆங்கிலத்தில் 43, அறிவியலில் 64, சமூக அறிவியலில் 51,மதிப்பெண் பெற்ற நிலையில் கணிதத்தில் 26, மதிப்பெண் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தார்.
வேதனையில் இருந்த மாணவி ஷாலினியா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் மாணவியின் உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர்.
