தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆட்டோக்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் தொடர்கிறது

ஆட்டோக்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் தொடர்கிறது

ஆட்டோக்களில் மாணவர்கள் ஆபத்தான பயணம் தொடர்கிறது


ADDED : செப் 24, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி, செப்.25-

இளையான்குடியில் பள்ளி சிறுவர்களை அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம்  நீடிக்கிறது .

இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளுக்கு மாணவர்களை ஆட்டோக்களில் அழைத்து வருகின்றனர். மாணவர்கள்

அதிக எண்ணிக்கையில் ஏற்றப்படுவதுடன், சில நேரங்களில் ஆட்டோவின் பக்கவாட்டுப் பகுதி,

பின் பகுதியிலும் ஆபத்தான முறையில் அமர வைத்து ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் அழைத்து செல்கின்றனர். வேகத்தடைகளில் திடீரென பிரேக் போடும்போது அவர்கள் கீழே விழும் வாய்ப்புள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இவர்களை கண்காணிப்பது கிடையாது.பெற்றோர்களும் இதனை கண்டு கொள்வதில்லை. 

விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் ஆட்டோக்களில் பள்ளி சிறுவர்கள் மற்றும் மாணவர்களை ஏற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us