நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தோட்டக்கலைப் பண்ணை அலுவலர் ராம்பிரசாத் வரவேற்றார். மாணவர்களுக்கு முந்திரி, பூவரசு மரங்களை பற்றி எடுத்து கூறினர். குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி பற்றி தோட்டக்கலை பண்ணை உதவி அலுவலர் மாயவேல் பேசினார். ஆசிரியர் ஸ்ரீதர் கலந்துகொண்டார்.

