/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்கள் அரசு பணியை எதிர்பார்க்காதீர்கள்
/
மாணவர்கள் அரசு பணியை எதிர்பார்க்காதீர்கள்
ADDED : ஜன 26, 2025 07:13 AM
சிவகங்கை, :  இந்திய மாணவர்கள் அரசு பணியை எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் செய்ய முன் வர வேண்டும் என சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
சிவகங்கையில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி 25ம் ஆண்டு விழா  நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி தலைமை வகித்தார். பள்ளி அறக்கட்டளைச் செயலர் சேகர் வரவேற்றார்.
பட்டிமன்ற பேச்சாளர்இனியவன், தமிழ்நாடு அனைத்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மார்ட்டின் கென்னடி, துணைத்தலைவர் ஜான் ஆரோக்கிய பிரபு  கலந்து கொண்டனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீர கதிரவன், பாஸ்கரன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஐசக் மோகன்லால், கிருஷ்ணவேணி, சுபாஷ்பாபு, சரவணன், காந்தி, மகேந்திரன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் தாழைமுத்தரசு, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தவள்ளி, அரசு பிளிடர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் திலக்குமார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேவராஜ், ஸ்ரீனிவாச ராகவன் கலந்து கொண்டனர்.
உயர்நீதி மன்ற நீதிபதிஸ்ரீமதி பேசுகையில், மாணவர்கள் அலைபேசியில் மூழ்கி இருக்காமல் அம்மா அப்பாவிடம் அன்பு செலுத்துங்கள். அம்மா அப்பாவிடம் தங்களது வீரத்தை காட்டாதீர்கள். உங்கள் வீரத்தை எதிரிகளிடம் மட்டுமே காட்ட வேண்டும்.
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்ற குழந்தைகள் தற்போது இந்தியா இருக்கக்கூடிய சூழ்நிலையில் அரசு பணியை எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் செய்ய முன்வாருங்கள். இந்தியா தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்கிறது.
ஆகையால்  இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரிக்க சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதன்மூலம் வாழ்க்கையில் வளர்ச்சி பாதையை நீங்கள் அடைய வேண்டும் என்றார்.

