/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
/
வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
வகுப்பறை பற்றாக்குறையால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
ADDED : ஆக 21, 2025 06:43 AM

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது.
குன்னத்துாரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மூன்று கட்டடங்களில் வகுப்பறை நடந்து வந்த நிலையில் ஓட்டு கட்டடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. மற்றொரு கான்கிரீட் கட்டடம் பழுது காரணமாக பூட்டப்பட்டது.
2 வகுப்பறை கொண்ட ஒரே கட்டடத்தில் 8 வகுப்பு நடத்த வேண்டியுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் ஆய்வகமும் இக்கட்டடத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடப்பற்றாக்குறையால் தவிக்கின்றனர். 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஊராட்சி சமுதாய கூடத்தில் சில வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் விழாக்கள் நடக்கும் போது மாணவர்கள் பள்ளி முன் மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது.
நேற்று இம்மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாணவர்கள் மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டது.
ஆர்.பார்த்தசாரதி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்: ஏற்கனவே இருந்த ஓட்டு கட்டடத்தை இடிக்கும் போது புதிய கட்டடம் கட்டுவதாக கூறினார்கள். அதனால் தான் இடிக்க அனுமதித்தோம். ஆனால் இதுவரை கட்டித் தரவில்லை.
மற்றொரு கட்டடமும் பழுதடைந்து மராமத்து செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 8 ஆண்டு தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்.அதிகாரிகள் வந்து பார்த்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
முகூர்த்த நாட்களில் மாணவர்கள் வீதியில் மழையிலும் வெயிலிலும் அமர்ந்து படிப்பது வேதனையாக உள்ளது. எங்கள் பள்ளிக்கு விரைந்து கூடுதல் புதிய கட்டடம் கட்டி தர வேண்டும், என்றார்.