/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காம்பவுண்ட் சுவர் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி
/
காம்பவுண்ட் சுவர் இல்லாத பள்ளியில் மாணவர்கள் அவதி
ADDED : ஜன 30, 2025 05:20 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரசுப் பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மணிமுத்தாறு கரை மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பள்ளியின் இடது மற்றும் பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாம்பு, காட்டு மாடுகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து விடுகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பள்ளியில் இருந்து சில மீட்டர் துாரத்தில் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால் அங்கு மதுவை வாங்கி வரும் 'குடி'மகன்கள் பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து அருந்துகின்றனர். மேலும் மாணவிகளின் கழிப்பறை உள்ள பகுதியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பள்ளியை ஒட்டிய வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் திரியும் நிலையில் அவையும் பள்ளிகளுக்குள் நுழைவதும், அவற்றை நாய்கள் விரட்டுவதும் நடக்கிறது. இதனால் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதில் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. எனவே இப்பள்ளியைச் சுற்றி முழுவதும் காம்பவுண்ட் சுவர் அமைக்க பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

