ADDED : ஆக 16, 2026 05:10 PM
தேவகோட்டை, ஆக. 17 -
தேவகோட்டையில் இருந்து 15 கி.மீ.துாரத்தில் உள்ளது புளியால். இதனைச் சுற்றி 15 கிராமங்கள் உள்ளன. பல மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு படிக்க சென்று வருகின்றனர். புளியாலில் அரசு உயர்நிலைப் பள்ளி இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் தேவகோட்டைக்கு தான் வருகின்றனர்.
திருவாடானையில் இருந்து தேவகோட்டை க்கு அரசு டவுன் பஸ் இயக்கினாலும் மாணவர்கள் பள்ளி நேரத்திற்கு செல்ல அரசு டவுன் பஸ் இல்லை. தனியார் பஸ் தான் உள்ளது. காலை 6:45 மணி முதல் 7:10 வரை மூன்று அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாணவர்கள் அதிகாலை 6:00 மணிக்கே தயாராக வேண்டி உள்ளது. குறிப்பாக சக்கந்தி இருமதி அதங்குடி விலக்கு, கோடிக் கோட்டை பகுதிகளில் மெயின் ரோட்டிற்கு வர கால் மணி நேரம் ஆகிறது. காலையிலேயே களைப்புடன் தான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. பள்ளிகள் ஒன்பது மணிக்குத்தான் இரண்டு மணி நேரம் தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிலும் பள்ளிகளிலும் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர்.
எனவே அதிகாலையில் இயக்கப்படும் பஸ்களை காலை 8:00 மணியளவில் மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் இயக்க வேண்டும்.
