/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வில்வித்தையில் பதக்கம் பெற்ற மாணவர்கள்
/
வில்வித்தையில் பதக்கம் பெற்ற மாணவர்கள்
ADDED : ஜூலை 10, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஈரோட்டில் சர்வதேச வில்வித்தை போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் பரமசிவம், பயிற்சியாளர் சுரேஷ் சிங் தலைமையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நான்கு பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில், சிவகங்கையை சேர்ந்த மாணவர்கள் வில்வித்தை போட்டியில் 17 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை பெற்றனர். ஒட்டு மொத்தமாக சிவகங்கை மாணவர்கள் 29 பதக்கங்களை வென்றனர்.