/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிலம்பப் போட்டி மாணவர்கள் வெற்றி
/
சிலம்பப் போட்டி மாணவர்கள் வெற்றி
ADDED : ஜன 11, 2026 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: பள்ளி கல்வித்துறை சார்பில் தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி சார்பில் பயிற்சியாளர்கள் செல்வம் மற்றும் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இரட்டைக்கம்பு பிரிவில் ரித்தீஸ், புகழேஷ் தங்கம், ஒற்றைக்கம்பு பிரிவில் அகதீஸ்குமார் தங்கம், மதன்குமார் வெள்ளி பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்களை பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டினர்.

