ADDED : பிப் 20, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.புதுார், - எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் முருகன் மகன் இளையராஜா 40. இவர் வாடகை கட்டடத்தில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவர் பிப். 19ம் தேதி தனது ஸ்டுடியோவை பூட்டிவிட்டு சென்று விட்டார். இவரது ஸ்டூடியோவில் தீ எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடையை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். உள்ளே போட்டோ, வீடியோ கேமராக்கள், பிரிண்டர்கள் தீயில் எரிந்தது. தீயை அணைக்க முயன்ற இளைஞர் சேகர் என்பவர் தவறி விழுந்து காயம் அடைந்து பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

