ADDED : ஜன 09, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஆதிதிராவிட, பழங்குடியின சமூக மேம்பாட்டிற்காக தாட்கோ மூலம் மானிய கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஆதிதிராவிட, பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் http://newscheme.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகையில் 35 சதவீதம் அல்லது ரூ.3.5 லட்சம். இதில் எது குறைவோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.
தவணை தொகையை தவறாமல் திரும்பி செலுத்தினால், மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்றார்.

