தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானியத்தில் பாரம்பரிய விதை நெல்

மானியத்தில் பாரம்பரிய விதை நெல்

மானியத்தில் பாரம்பரிய விதை நெல்


ADDED : பிப் 27, 2024 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரவிவசாயிகளுக்காகவேளாண் அலுவலகத்தில் மானிய விலையில் பாரம்பரிய நெல் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

திருப்புவனம் வட்டாரத்தில் என்.எல்.ஆர்., கோ 53, ஆர்.என்.ஆர்., கர்நாடக பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படுகின்றன. பாரம்பரிய நெல் ரகங்கள் ஒருசில விவசாயிகளே பயிரிடுகின்றனர். அவர்களுக்காக திருப்புவனம் வேளாண் அலுவலகத்தில் கருங்குறுவை, பூங்கார், அற்புதம் குறுவை உள்ளிட்ட நெல் ரகங்கள் மானியம் போக கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திருப்புவனம் வட்டாரத்தில் கீழடி, கொந்தகை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சொந்த பயன்பாட்டிற்கு மட்டும் பயிரிடுகின்றனர்.இதனால் வேளாண் அலுவலகத்தில் குறைந்த அளவு பாரம்பரிய நெல் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகள் ஆர்வமுடன் பாரம்பரிய நெல் ரகங்கள் கேட்டால் அடுத்தாண்டு முதல் கூடுதலாக நெல் கொள்முதல் செய்து வழங்குவோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us