தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்

குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்

குறுந்தானிய சாகுபடிக்கு மானியம்


UPDATED : நவ 19, 2026 07:28 PM

ADDED : நவ 19, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:28 PM ADDED : நவ 19, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மாவட்டத்தில் குறுந்தானிய பயிர் சாகுபடிக்கு எக்டேருக்கு ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் சங்கரலட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்டத்தில் குறுந்தானிய பயிர்களின் சாகுபடியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற குறுந்தானிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.8 ஆயிரம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும். விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு எக்டேருக்கு மட்டுமே மானியம் தரப்படும். இதன் கீழ் உழவு செய்தல், களை எடுத்தல், தெளிப்பு பணி, பறவைகளை விரட்டுதல் போன்ற இடுபணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றார். //

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us