தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மழையால் கோடை விவசாயம் பாதிப்பு

 மழையால் கோடை விவசாயம் பாதிப்பு

 மழையால் கோடை விவசாயம் பாதிப்பு


ADDED : ஜூன் 22, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 02:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கோடை மழையால் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

வைகை நதி பாயும் திருப்புவனம் தாலுகாவில் சம்பா பருவத்தில் 3 ஆயிரம் ஏக்கரிலும், கோடையில் 500 ஏக்கரிலும் நெல் பயிரிடப்படும்.

திருப்புவனம் தாலுகாவில் பூவந்தி, கொந்தகை, கட்டமன்கோட்டை பகுதிகளில் கோடை விவசாயம் பெருமளவு நடக்கும். ஏக்கருக்கு ரூ.20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து, கோ 51, அட்சயா உள்ளிட்ட 120 நாள் ரகங்களை பயிரிட்டிருந்தனர்.

மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பாய்ச்சி நன்கு விளைச்சல் கண்ட நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழைக்கு நெற்பயிர்கள் சாய்ந்தன. 15 நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற் கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோடை விவசாயத்திற்கு மானிய விலையில் நெல், உரம் வழங்கப்படுவதில்லை. கடும் கோடை வெயில் காரணமாக தினசரி தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட செலவீனங்களும் அதிகம். மோட்டார் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் நிலங்களை தரிசாக விடாமல் தொடர்ச்சியாக பயிரிடுவது வழக்கம். தொடர்ச்சியாக மழை பெய்ததால் நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டன.

இது குறித்து கொந்தகை விவசாயி சுரேஷ் கூறியதாவது, 4 ஏக்கரில் நெல் பயிரிட்டேன். நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், தற்போது பெய்த மழைக்கு நெற்பயிர்கள் சாய்ந்துவிட்டன. கோடை விவசாயத்திற்கு காப்பீடும் இல்லை. இதனால் இழப்பீடும் பெற முடியாமல் தவிக்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us