/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கோடைகால நெல் அறுவடை தொடக்கம்
/
திருப்புவனத்தில் கோடைகால நெல் அறுவடை தொடக்கம்
ADDED : ஆக 02, 2025 11:11 PM

திருப்புவனம்,: திருப்புவனம் வட் டாரத்தில் கோடை கால நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம் வட் டாரத்தில் மணலுார், மழவராயனேந்தல், மடப்புரம், இலந்தைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் 150 ஏக்கரில் கோடை கால விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அட்சயா ஆர் 4, என்.எல்.ஆர்., கோ 50, கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் பயிரிட்டுள்ளனர். ஏக்கருக்கு 35 மூடை வரை நெல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மணலுார் தியாகராஜன் கூறுகையில், மணலுார் வட்டாரத்தில் 15 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் இந்தாண்டு சாகுபடி பரப் பளவு வெகுவாக குறைந்து விட்டது.
காலம் பருவத்தில் அட்சயா ஆர் 4 பயிரிட்டேன். 27 மூடை நெல் கிடைத்தது. தற்போது கோடையில் என்.எல் ஆர்., ரகம் பயிரிட்டேன். 35 மூடைகள் வரை கிடைத்துள்ளது. கோடையில் அதிகளவு விளைச்சல் கிடைக்கும்.
அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நெல் அறுவடை முடிந்த பின் நாற்றங்கால் அமைக்கும் பணியை தொடங்க உள்ளேன். இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறுகிறது. ஏக்கருக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் அறுவடை கூலி, ஒரு மணி நேரத்தில் அறுவடை முடிந்துவிடும், இரண்டரை ஏக்கரில் நெல் நடவு செய்துள்ளேன், என்றார்.
முசாபர்அலி கூறுகையில், நெல் விவசாயம் குறைந்ததற்கு காரணம் பன்றிகள் தான், இரவு நேரத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து நெல் வயல்களை நாசம் செய்து விடுகிறது. இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருப்பதால் கண்மாய்களில் தண்ணீர் இல்லை. எனவே கருவேல மரங்களின் அடியில் கூட்டம் கூட்டமாக தங்கி யுள்ள பன்றிகள் இரவு நேரத்தில் வந்து நெல் வயல்களை நாசம் செய்து விடுகிறது.
கோடையில் குறைந்த அளவு விவசாயிகளே நெல் நடவு பணியில் ஈடுபடுவதால் பன்றிகள் உணவு, தண்ணீர் தேடி நெல் வயல்களை நாசம் செய்துவிடுகிறது,என்றார்.