/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசுப்பள்ளிக்கு பொருட்கள் வழங்கல்
/
அரசுப்பள்ளிக்கு பொருட்கள் வழங்கல்
ADDED : ஜன 24, 2025 04:34 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திருக்குறள் ஊழியம் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் பொருட்கள் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் ராய்செல்வன் தலைமை வகித்தார். பொறுப்பு தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் வரவேற்றார். பழனியப்பன், சோமசுந்தரம், நாகராஜன், நாகப்பன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா பங்கேற்றனர். தொழிலதிபர் கரு.சிதம்பரனார் பரிசு வழங்கினார்.
முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ. 10000 ஊக்கத்தொகையும் நிறுவனத்தில் பணி வாய்ப்பும் வழங்குவதாக தொழிலதிபர் தமிழரசு உறுதியளித்தார்.
முதுகலை ஆசிரியர் பிரபு நன்றி கூறினார். தமிழ் ஆசிரியர்கள் ராஜபாண்டி, ரமேஷ், அக்னிபாண்டி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.