நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விதைப்பந்து வழங்கும் விழா நடந்தது.
பள்ளித் தாளாளர் நா.ராமேஸ்வரன் தலைமை வகித்து மாணவர்களுக்கு விதைப் பந்துகள் வழங்கி, 'மரம் வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், விதைப் பந்துகள் மூலம் மரம் வளர்ப்பு ' குறித்தும் விளக்கினார். முதல்வர் அமுதா, துணை முதல்வர் அருள் சேவியர் அந்தோனி ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

