UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அண்ணாமலை செட்டியார் அறக் கட்டளை சார்பில் கல்லுாரி நிறுவனர் சேவுகன் அண்ணா மலை செட்டியார் சிவகாமி ஆச்சி நினைவாக கட்டப்பட்ட மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் மருத்துவத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திறப்பு விழா கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. முதல்வர் கண்ணன் வரவேற்றார். அமைச்சர் பிரபு கட்டடத்தை திறந்து வைத்தார்.
உபகரணங்கள் வாங்க டாக்டர் ஜெயந்தி ரூ.10 லட்சம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட இணை இயக்குநர் லெட்சுமிதரன், மருத்துவமனை தலைமை மருத்துவர் செங்கதிர், அறக்கட்டளை துணை தலைவர் சாந்தி பங்கேற்றனர். பொருளாளர் சேவுகன் நன்றி கூறினார்.
