ADDED : நவ 20, 2025 04:16 AM

சிவகங்கை: சர்வேயர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உட்பட 18 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மதியரசன், சிவன், சங்கீதா முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் கார்த்திக் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகேந்திரன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, நில அளவை சங்க நிர்வாகிகள் சுரேஷ், முருகன், ராஜகுரு ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
நில அளவையர்களுக்கு குறுவட்ட அளவையர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இத்துறை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிதாக பிரித்த கோட்டங்களுக்கு ஆய்வாளர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்ட பொருளாளர் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.

