/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெள்ள நிவாரண பணிக்கான ஊக்கத்தொகை 2 ஆண்டாக இழுத்தடிப்பு துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு
/
வெள்ள நிவாரண பணிக்கான ஊக்கத்தொகை 2 ஆண்டாக இழுத்தடிப்பு துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு
வெள்ள நிவாரண பணிக்கான ஊக்கத்தொகை 2 ஆண்டாக இழுத்தடிப்பு துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு
வெள்ள நிவாரண பணிக்கான ஊக்கத்தொகை 2 ஆண்டாக இழுத்தடிப்பு துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு
ADDED : டிச 06, 2025 05:27 AM

2023ம் ஆண்டு டிச. 17, 18 தேதிகளில் துாத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. மழையால் பாலங்கள், சாலைகள், அரசு அலுவலகங்கள் சேதமடைந்தன. வீடுகள் இடிந்து, பயிர்கள் நாசமாயின.
அம்மாவட்ட நிர்வாகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் துாத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு இரவு, பகலாக நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
4 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை முகாமிட்டு பணியில் ஈடுபட்டனர். அப்பணிக்காக அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சென்னை வெள்ளப் பணிகளுக்குச் சென்ற துாய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்பட்டது. ஆனால் தூத்துக்குடி சென்று வந்த பணியாளர்களுக்கு குறிப்பாக சிவகங்கை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளில் இருந்து சென்ற துாய்மை பணியாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
துாய்மை பணியாளர்கள் கூறும்போது: கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு உதவ அதிகாரிகளும் அரசும் கேட்டுக் கொண்டதால், நாங்கள் அங்கு சென்று நிவாரண, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம்.
எங்களுக்கு தருவதாக அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை.
அதை உடனடியாக வழங்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். வரும் காலங்களில் இது போன்ற நிவாரண சீரமைப்பு பணிகளில் ஈடுபட உத்வேகமாகவும் இருக்கும், என்றனர்.

