ADDED : ஜன 09, 2025 05:14 AM

சிவகங்கை: சிவகங்கை நீச்சல் கழகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் 6 முதல் 25 வயதினருக்கான நீச்சல் போட்டி ஜன.,11 ல் நடைபெறும் என தலைவர் ஜெயதாஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கான வயது 6 முதல் 25 வயது பிரிவை சேர்ந்த ஆண், பெண்களுக்கான நீச்சல் போட்டி ஜன., 11 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும். இதில் 8 பிரிவுகளாக 126 போட்டி வரை நடத்தப்படும். இதில் பங்கேற்க வரும் ஒரு நபர் நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
தனிநபர் 5 தனி நபர் போட்டி மற்றும் இரண்டு குழுக்கள் போட்டியிலும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் 81223 66679 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப்' மூலம் பதிவு செய்யலாம். போட்டியை அன்று காலை 7:00 மணிக்கு கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைக்கிறார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகிக்கிறார். ஏற்பாடுகளை சிவகங்கை நீச்சல் கழகத்தினர் செய்து வருகின்றனர், என்றார்.

