ADDED : மே 07, 2025 02:17 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஆக இருந்த அச்சல் சர்மா, அருணாச்சலம் வடகிழக்கு மாநில எல்லை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
டில்லி இந்தோ திபெத் போலீஸ் எல்லை பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் டி.ஐ.ஜி., ஆக இருந்த டீ.ஜஸ்டின் ராபர்ட், நேற்று சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஆக பதவியேற்றார்.
இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.
