நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துார் கிளை நுாலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு தமிழ்கடல் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். பாவலர் சக்திவேல் தலைமை வகித்தார். நல்நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளர் ஆசிரியர் ரெத்தினம் அறிமுகவுரையாற்றினார். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி துவக்கவுரையாற்றினார்.கவிஞர்கள் நடராஜன், லெட்சுமி,சுகன்யா,வைகைபிரபா ஆகியோர் கவிதை வாசித்தனர். அல் அமீர் கல்வியியல் கல்லூரி தாளாளர் சுலைமான்பாதுஷா வாழ்த்தினார்.
இளையோர் பேச்சரங்கில் மாணவிகள் ராஜலெட்சுமி, ஜோதிகா, பகவதி, பத்மசினேகா, யோகேஸ்வரி, கரண் பங்கேற்றனர். கவிஞர் வா.மு.சேதுராமன் சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கவிஞர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.