/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்ற விழா
/
கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்ற விழா
ADDED : ஜன 20, 2025 05:17 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் தமிழ் மன்றம் சார்பில் மூன்று நாட்கள் நடந்த பொங்கல் விழா நிறைவடைந்தது.
கீழச்சிவல்பட்டியில் பாடுவார் முத்தப்பர் கோட்ட அரங்கில் 69 ஆம் ஆண்டாக இவ்விழா நடந்தது. தமிழ் இலக்கிய, ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மூன்றாம் நாளில் ஷிவானி தமிழ் வணக்கப்பாடல் பாடினார்.
தாசில்தார் கண்ணன் தலைமை வகித்தார். பொறியாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்
முத்துபாண்டியன் 'எல்லாம் நன்மைக்கே' என்ற தலைப்பில் பேசினார்.
மங்களம் பொங்கிடும் பொங்கலோ பொங்கல்' என்ற தலைப்பில் பேராசியர் கபிலாவிசாலாட்சி பேசினார்.
சோனைக்கரசி ஆன்மீக உரையாற்றினார். தொடர்ந்து லேனாசேகரின் இன்னிசை, மாணவ,மாணவியர் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. செயலர்கள் எஸ்.எம்.,பழனியப்பன், பழ.அழகுமணிகண்டன், எஸ்.அழகப்பன், எம்.சொக்கலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.