ADDED : ஏப் 07, 2025 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் சிவகங்கை மாவட்டம் மடப்புரமும் ஒன்று, மதுரை, ராமேஸ்வரம் வரும் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்ற முன்னாள் கவர்னர் தமிழிசை மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தார். அம்மனுக்கு முன் உள்ள சத்தியக் கல்லை சிறிது நேரம் வேண்டிக்கொண்டு தொட்டு வணங்கினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மோடி பிரபாகரன், மாவட்ட செயலாளர் மீனாதேவி, கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

