/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு
/
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு
ADDED : டிச 23, 2025 05:37 AM
தேவகோட்டை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேவகோட்டை, கண்ணங்குடி வட்டார கிளை மாநாடு கிளை தலைவர் சேவியர் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் எட்வின் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் முத்து ராமசாமி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிரபு இயக்க செயல்பாடுகளை விவரித்தார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி அறி வியலை அறிவோம் அறிவியலால் இணைவோம் என்ற தலைப்பில் பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேவகோட்டை கிளை தலைவராக ஜேம்ஸ் ரோச் சேகர், செயலாளர் கார்த்தி கேயராஜா, பொருளாளர் ஜெயபாலன், துணை தலைவர் செல்வம், துணை செயலாளர் ராஜசேகரன் ஆகியோரும், கண்ணங்குடி கிளை தலைவராக சரவணன், செயலாளர் குருமூர்த்தி, பொருளாளர் தமிழரசன், துணை தலைவர் குமரேசன், துணை செயலாளர் உமாராணி ஆகியோரும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

