/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
/
தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்
ADDED : ஏப் 15, 2025 05:54 AM

தேவகோட்டை: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தேவகோட்டையில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கற்பக விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலை பஞ்சாங்கம் வாசித்தனர். நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில், தி.ராம.சாமி., கோயிலில் வேலிற்கு மகேஸ்வர பூஜை நடந்தது.
சுந்தர விநாயகர் கோயில், பாலமுருகன் கோயில், புவனேஸ்வரிஅம்மன் கோயில், கலங்காது கண்ட விநாயகர்கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், சவுபாக்ய துர்கை அம்மன் கோயில், திருமணவயல் தியான பீட மகா கணபதி கோயில், பட்டுக்குருக்கள் நகர் பிருத்தியங்கிராதேவி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.