/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி
/
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி
ADDED : ஏப் 15, 2025 07:16 AM

திருப்புத்தூர்: சித்திரை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம், சிறப்பு அபிேஷகம், விசுவாவசு பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.
இக்கோயில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு நடைதிறந்து திருவனந்தல் பூஜை நடந்தது. மூலவர் தங்க கவசம், உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசனம் செய்தனர். காலை 9:20 மணிக்கு வெள்ளி பல்லக்கில் அங்குச, அஸ்திர தேவர்கள் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தில் எழுந்தருளினர்.
பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடத்தினர். அங்குச, அஸ்திர தேவர்களுக்கு நவ திரவிய அபிேஷகம், ஆராதனைகள், தீர்த்தவாரி நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
மதியம் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மருதீசர் சன்னதி முன், ராசி விதான மண்டலத்தின் கீழ் சிவாச்சார்யார்கள் விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கம் வாசித்தனர்.
சந்திரசேகரர், அம்பாள், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பரம்பரை டிரஸ்டிகள் காரைக்குடி சித.பழனியப்பன், நச்சாந்துபட்டி எம்.குமரப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.