/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
10ம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
/
10ம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
10ம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
10ம் வகுப்பிற்கும் அகமதிப்பெண் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
ADDED : ஆக 21, 2025 10:54 AM
சிவகங்கை: 'அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகமதிப்பெண் வழங்குவது போல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அகமதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கையில், தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொதுச்செயலர் இளங்கோ கூறியதாவது:
அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகமதிப்பெண், 10 வழங்குவது நடைமுறையில் உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில் அகமதிப்பெண் 10, செய்முறைத் தேர்வு 20 என, 30 மதிப்பெண் போக, 70 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பிற பாடங்களுக்கு, 10 அகமதிப்பெண் வழங்கப்படுகிறது. 90 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் கேட்கப்படுகிறது.
அதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தற்போது அறிவியல் பாடத்தில், 25 மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வு நடத்தி, மதிப்பெண் வழங்கப்படுகிறது. 100 மதிப்பெண்ணில் மீதமுள்ள, 75 மதிப்பெண்ணுக்கு வினாத்தாள் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்களுக்கு, அக மதிப்பெண், 10 வழங்கி மீதமுள்ள, 90 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்த வேண்டும்.
இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் சமநிலை அடைந்து, இடைநிற்றல் குறைந்து உயர்கல்வி பெற வழிவகுக்கும். எனவே, அரசு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அக மதிப்பெண், 10 வழங்குவதுபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் பாடம் தவிர மற்ற, 4 பாடங்களுக்கும் அகமதிப்பெண் வழங்கும் முறையை, தமிழக பள்ளி கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

