/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
3 சதவீத அகவிலைப்படி தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
/
3 சதவீத அகவிலைப்படி தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை
ADDED : அக் 30, 2025 03:58 AM
சிவகங்கை: தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொதுச் செயலர் இளங்கோ கூறியதாவது: மத்திய அரசு ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவித்துள்ளது.
இன்று வரை மாநில அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காதது தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக முதல்வர் 2023 மே 17 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அக விலைப்படி உயர்வை 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார்.
மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதோடு வரும் காலங்களில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் ஜூலையில் மத்திய அரசு அறிவித்து விட்ட நிலையில் தமிழக அரசு இன்று வரை அகவிலைப்படி உயர்வு அறிவிக்காதது ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

