/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் டேங்கர் லாரி கவிழ்ந்தது * ரோட்டில் ஓடிய சர்க்கரை பாகு கழிவு

ADDED : ஏப் 19, 2025 01:11 AM

சிவகங்கை:சிவகங்கை அருகே சோழபுரத்தில் சர்க்கரை பாகு கழிவு ஏற்றி வந்த ‛டேங்கர் லாரி' கவிழ்ந்ததில், டிரைவர் காயமுற்றார். ரோட்டோர கால்வாயில் 30,000 லிட்டர் சர்க்கரை பாகு கழிவு ஓடியது.
திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகன் 48. இவர் நேற்று காலை சிவகங்கை படமாத்துார் சர்க்கரை ஆலையில் இருந்து டேங்கர் லாரியில் 30,000 லிட்டர் சர்க்கரை பாகு கழிவை கும்பகோணத்தில் உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து சென்றார். நேற்று காலை 11:00 மணிக்கு சிவகங்கை அருகே சோழபுரத்தில் சென்றபோது, லாரி நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த எச்சரிக்கை போர்டில் மோதியது. லாரியை ரோட்டில் ஏற்ற டிரைவர் முயற்சித்தார். அப்போது லாரி நிலை தடுமாறி ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. டிரைவர் கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரியில் இருந்த 30,000 லிட்டர் சர்க்கரை பாகு கழிவு ரோட்டோர கால்வாயில் ஓடியது. சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.