/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்பயிர்களை காப்பாற்ற டேங்கர் தண்ணீர்
/
நெற்பயிர்களை காப்பாற்ற டேங்கர் தண்ணீர்
ADDED : ஜன 04, 2026 06:15 AM

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும், இளையான்குடியை ஒட்டியுள்ள காளையார் கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் வாடி வருகிறது. விவசாயிகள் டேங்கரில் தண்ணீரை கொண்டு வந்து பாய்ச்சி வருகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட கிராமங் களிலும், இளையான்குடி தாலுகாவை ஒட்டிய காளையார் கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
தற்போது ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் பால் பிடித்து நெற்கதிர் வளர்ந்து வரும் நிலையில் போதிய மழை இல்லாமல் வாடி வருவதால் விவசாயிகள் டிராக்டர் டேங்கரில் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பாய்ச்சி வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: பேச்சில்லா கிராமம், இடைக்காட்டூர் மற்றும் அருகே உள்ள மருதங்குடி, திருப்பு புலி உள்ளிட்ட கிராம பகுதிகளில் போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் வாடி வருவதால் அதனை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி டேங்கரில் கொண்டு வந்து வயல்களுக்கு பாய்ச்சி வருகிறோம். இதுவும் பற்றாக்குறையாக தான் உள்ளது என்றனர்.

