/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாவி ஒப்படைப்பு போராட்டம் டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
/
சாவி ஒப்படைப்பு போராட்டம் டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
சாவி ஒப்படைப்பு போராட்டம் டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
சாவி ஒப்படைப்பு போராட்டம் டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு தீர்மானம்
ADDED : நவ 26, 2025 03:38 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் காலி மதுபாட்டில்களை வாங்க கூறுவதை கண்டித்து, இன்று மாவட்ட மேலாளரிடம் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். தொ.மு.ச., மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ராஜ்மோகன், சி.ஐ.டி.யு., மாநில தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் திருமாறன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் தாழைமுத்து, அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார், விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகி மலைராசு, பா.ஜ., தொழிற்சங்க நிர்வாகி பெரியகருப்பன், மாற்றுத் திறனாளிகள் சங்க செயலாளர் அரியகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் உள்ள 115 டாஸ்மாக் மதுக்கடைகளில் காலிபாட்டில்களை வாங்க நிர்பந்திக்க கூடாது.
இதற்கென தனி ஊழியர், இடம், ஒப்பந்தம் விட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை சிவகங்கை டாஸ்மாக் மேலாளர் சுரேஷ் கண்ணனிடம், டாஸ்மாக் மதுக்கடை சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

