ADDED : ஜூலை 13, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தேர்தல் ஆணையராக மகாலிங்கம், துணை ஆணையராக செல்வம், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவராக பாண்டியராஜன், செயலாளர் ராமராஜ், பொருளாளர் நவராஜ், துணை தலைவர் ரங்கசாமி, கோவிந்தராஜ், விஜயராணி, துணை செயலாளர் டென்சிங் அருள்ராஜ், சாந்தினி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் சிவாஜி, மாநில துணை தலைவர் கோடீஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், செயலாளர்கள் சுரேஷ், போஸ், ராஜூ பங்கேற்றனர்.