ADDED : ஜூலை 28, 2025 06:48 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புரட்சித் தம்பி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானத்தை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், ரவி, குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓய்வுநிலையில் உள்ள ஆசிரியர்களின் தணிக்கை தடை பெயரில் பலன்களை அனுமதிக்காமல் காலம் தாழ்த்திவருவதை கண்டிப்பது.
அரசாணை 243 ன் படி ஆசிரியர் பணிட மாறுதலை ரத்து செய்ய வேண்டும்.
ஆர்.சி., பள்ளி ஆசிரியர், ஊழியர்களிடம் மாத சம்பளத்தில் 2 சதவீதத்தை நிர்வாக செலவினமாக வசூலிப்பதை கண்டிப்பது என தீர்மானம் நிறை வேற்றினர்.