/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளிகளுக்குள் படையெடுக்கும் பாம்புகள் அச்சத்தில் ஆசிரியர், மாணவர்கள்

ADDED : ஆக 02, 2025 12:44 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பள்ளிகளில் புதர்கள், சுவர் வெடிப்புகள் காரணமாக பாம்புகள் பள்ளிகளுக்குள் படையெடுப்பது தொடர்கிறது.
இத்தாலுகாவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கிய நிலையில் சில பள்ளிகளில் செடி, புதர்கள் அகற்றப்படாமலும் சுவர்களில் உள்ள துளை, வெடிப்புகள் சரி செய்யப்படாமலும் உள்ளது. இதனால் வனப்பகுதியில் திரியும் பாம்புகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது. இது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அச்சுறுத்தி வருகிறது. பாம்புகள் தென்படும் போது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சென்று அவர்கள் வந்து பாம்புகளை பிடித்து செல்கின்றனர். நேற்று வேட்டையன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கழிப்பறையில் ஒரு பாம்பு புகுந்த நிலையில் மாணவர்கள் அலறடித்து ஓடினர். இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்த போது பாம்பு ஓடி மறைந்து விட்டது. அனைத்து பள்ளிகளிலும் செடி, புதர்களை அகற்றி சுவர்களில் உள்ள துளை, வெடிப்புகளை சரி செய்து பாம்புகள் பள்ளி வளாகத்திற்குள் வராதவாறு தடுக்க வேண்டும்.