ADDED : அக் 10, 2024 05:28 AM
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் தொழிற்சங்கம் அமைக்க உரிமை கோரி போராடிவரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், குமரேசன், ரவி முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சகாய தைனேஸ் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் அமலசேவியர், சேவியர்சத்தியநாதன், ஜீவாஆனந்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் பஞ்சுராஜூ, முத்துக்குமார், கஸ்துாரி, கல்வி மாவட்டத் தலைவர்கள் ஜான்கென்னடி, ஜோசப், கல்வி மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், நா.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.