/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடைத்தாள் திருத்தும் முகாமில் ஆசிரியர்கள் போராட்டம்
/
விடைத்தாள் திருத்தும் முகாமில் ஆசிரியர்கள் போராட்டம்
விடைத்தாள் திருத்தும் முகாமில் ஆசிரியர்கள் போராட்டம்
விடைத்தாள் திருத்தும் முகாமில் ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஏப் 23, 2025 05:57 AM

சிவகங்கை, : சிவகங்கையில் பள்ளி ஒன்றில் நேற்று முதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள் திருத்தும் பணிக்காக காலையில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மையத்துக்கு வந்தனர். அவர்களில் 400 பேருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டது.
மற்ற ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து அனுப்ப வேண்டும். ஆனால் அதிகாரிகள் பணி விடுவிப்பு செய்யவில்லை. இதனால் அவர்கள் மாலை 5:30 மணி வரை காத்திருந்தனர்.
தொடர்ந்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பணி வழங்காத ஆசிரியர்களை விடுவிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது துணை அதிகாரி ஒருவர், பெண் ஆசிரியர்களை அவதுாறாக பேசியுள்ளார். அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.