/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர்கள் போராட்டம் 1470 பேர் ‛'ஆப்சென்ட்'
/
ஆசிரியர்கள் போராட்டம் 1470 பேர் ‛'ஆப்சென்ட்'
ADDED : ஜூலை 19, 2025 12:15 AM
சிவகங்கை,: பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 117 ஆசிரியர், 98 ஆசிரியை உள்ளிட்ட 215 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய தைனேஸ் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பரசு பிரபாகர், ஜான்பீட்டர், மனோகரன், செல்வகுமார், சக்திவேல், ராம ராஜன், அருள் முன்னிலை வகித்தனர்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் எஸ்.மயில் மறியலை துவக்கி வைத்தார். 575 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நேற்று 852 ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு சென்றனர். 129 பேர் விடுப்பில் சென்றதால், 798 ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகினர். தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 1,064 பேர் பணிக்கு வந்திருந்தனர். 86 பேர் விடுப்பில் சென்ற நிலையில் 672 ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகினர்.

