/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிப்.,14ல் ஆர்ப்பாட்டம் ஆசிரியர் சங்கம் பங்கேற்பு
/
பிப்.,14ல் ஆர்ப்பாட்டம் ஆசிரியர் சங்கம் பங்கேற்பு
ADDED : ஜன 30, 2025 02:37 AM
சிவகங்கை:தமிழகம் முழுவதும் பிப்.,14ல் வட்ட அளவில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என மாநிலத் தலைவர் சேதுசெல்வம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறுகையில், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகளின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் பெறுதல், உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கும் முறையை அப்படியே பெறுதல், தொகுப்பூதியத்தில் மதிப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு காலமுறை ஊதியம் வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டே ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் வட்ட அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

