
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே பிள்ளையார்நத்தம் கிராம நொண்டி சுவாமி கோயில் காளை வயது முதிர்வால் நேற்று இறந்தது.
கோயிலுக்கு நேர்த்திக் கடனாக விடப்பட்ட இந்த காளை கிராம பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் அமைதியாக சுற்றி வலம் வந்தது. பயிர் விளைந்த வயல்களில் மேய்ந்தாலும் கிராமத்தினர் காளையை விரட்டுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றதில்லை.
நேற்று வயது முதிர்வால் இறந்த காளை பற்றிய செய்தி அறிந்ததும் சுற்றுவட்டார கிராமக்கள் வந்து வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் மனிதர்களுக்கு செய்வதுபோல் இறுதி காரியங்களை செய்து, ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் அருகே அடக்கம் செய்தனர்.