/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைப்பு
/
சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைப்பு
ADDED : மார் 04, 2026 05:37 AM

காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.
நேற்று மதியம் 3:20 முதல் மாலை 6:47 வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதனால், கோயில்கள், காலை 6:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே நடை திறக்கப்பட்டு இருந்தது.
கிரகணத்தின் போது எதிர்மறையாற்றல் அதிகளவில் வெளிப்படும் என்பதாலும், கோயிலையும் பக்தர்களையும் கிரகணம் பாதிக்க கூடாது என்பதாலும் கோயில்கள் நடை அடைக்கப்படுகிறது. கிரகணம் முடிந்து மீண்டும் கோயில்கள் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் உட்பட காரைக்குடி பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் நேற்று நடை அடைக்கப்பட்டு இருந்தது.

